உலகளவில் 2 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிப்பு - 3 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் சர்வதேச பொருளாதாரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 15, 2020

உலகளவில் 2 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிப்பு - 3 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2 மில்லியனையும் தாண்டியுள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கின்ற போதிலும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் படி 1,982,939 என சுட்டிக்காட்டுகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 185 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 1,982,281 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 126,722 ஆக காணப்படுகின்றது. 

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள் 

அமெரிக்கா : 609,407 
ஸ்பெய்ன் : 174,060 
இத்தாலி : 162,488 
ஜேர்மன் : 132,210 
பிரான்ஸ் : 131,362 
பிரிட்டன் : 94,845 
சீனா : 83,351 
ஈரான் : 74,877 
துருக்கி : 65,111 

கொரோனா தொற்றினால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள்

அமெரிக்கா : 26,033 
இத்தாலி : 21,067 
ஸ்பெய்ன் : 18,255 
பிரான்ஸ் : 15,729 
பிரிட்டன் : 12,107 
ஈரான் : 4,683 
பெல்ஜியம் : 4,157 
ஜேர்மன் : 3,495 
சீனா : 3,222 
நெதர்லாந்து : 2,945 
பிரேஸில் : 1,552 
துருக்கி : 1,403 
சுவிட்சர்லாந்து : 1,174 
சுவீடன் : 1,033 

சீனா
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் தற்போது மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 83,351 ஆக பதிவாகியுள்ளது. இதில் 1,500 கொரோனா தொற்றாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். இதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரிலும் 1,023 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அங்கு உயிரிழப்பு எண்ணிக்கையும் 3,222 ஆக பதிவாகியுள்ளது. 

அமெரிக்கா
உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு நேரடியாக பணம் செலுத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 26 ஆயிரத்தையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 600,000 தாண்டி விட்டன. கொரோனா தாக்கத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னிலையில் தற்போது அமெரிக்கா உள்ளது. 

பிரிட்டன் 
கொரோனா தொற்றினால் பதிப்புக்குள்ளான பிரிட்டன் போரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையிலிருந்து குணமடைந்த நிலையில் வெளியேறியிருப்பினும், அவர் பணிக்கு எப்போது திரும்புவார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டின் 1.3 பில்லியன் மக்களுக்கு குறைந்த பட்சம் 2020 மே மாதம் 3 ஆம் திகதி வரை பூட்டுதல் அறிவிப்பை நீடித்து வைப்பதாக அறிவித்துள்ளார். 

பிரான்ஸ்
2020 மே மாதம் 11 ஆம் திகதி வரை பிரான்ஸிக்கான பூட்டல் நடவடிக்கையை நீடித்து வைப்பதாக பிரதமர் இம்மானுவேல் மக்ரேன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும். எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐ.எம்.எப்
கொரோனா தொற்றினால் 2020 ஆம் ஆண்டில் உலக பொருளாதார நிலையானது 3 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 

No comments:

Post a Comment