பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் "கொவிட்-19" நிவாரணத்திற்கு ஒரு மாத கொடுப்பனவை வழங்க இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் "கொவிட்-19" நிவாரணத்திற்கு ஒரு மாத கொடுப்பனவை வழங்க இணக்கம்

(ஆர்.யசி) 

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஒருமாத கொடுப்பனவை "கொவிட்-19" கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக வழங்க அமைச்சரவையில் இணக்கம் கண்டுள்ளனர். 

அரச ஊழியர்கள் தமது கடமையை செய்கின்ற நேரத்தில் நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார். 

"கொவிட்-19" கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க "கொவிட்-19" நிவாரண நிதியம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அரச ஊழியர்கள் தமக்கான ஒரு மாத கொடுப்பனவுகளை "கொவிட்-19" கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு வழங்குகின்றார்கள் என்றால் ஆட்சியாளர்கள் முதலில் மக்களுக்கான சேவையை முன்னெடுக்க தமது கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். ஆகவே அதற்கு அமைச்சரவைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய பிரதமர் மற்றும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தமது ஒரு மாத கொடுப்பனவை கொவிட்-19 நிவாரண நிதிக்காக வழங்க தாம் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment