வருடாந்தம் நடைபெற்றுவரும் உடுகொட ப்ரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டுகளின் இறுதிநாள் வைபவங்கள் இன்று வெகுவிமர்சையாக உடுகொட அறபா மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டித் தொடருக்கு இம்முறை Fine Enterprises இன் இணை நிறுவனமான Xcort பிரதான அனுசரணையை வழங்கியிருந்ததுடன் பிரதான ஊடக அனுசரணையாளராக Capital FM இருந்த அதேவேளை மேலும் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆதரவுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தின் சம்பியன் அணியாக நூர் நுமூர் அணி தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை இரண்டாவது இடத்தை ஹஸனியன் புலட் அணி சுவீகரித்துக்கொண்டது. கிண்ணம் வழங்குதல் மற்றும் மேலும் பல முக்கிய நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
(பஸ்லான் - உடுகொடை)
No comments:
Post a Comment