நாவிதன்வெளியில் 'சிப்தொர' புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

நாவிதன்வெளியில் 'சிப்தொர' புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான்

சமூக அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக நாவிதன்வெளி வலயப் பிரிவில் சமூர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் பிள்ளைகளில் 2018/19ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து கா.பொ.உயர்தரம் கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு 'சமூர்த்தி சிப்தொர கல்விப் புலமைப் பரிசில்' திட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (10) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ்.சிவம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் எச்.எம் அலீம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சமூர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு கா.பொ.த உயர் தரம் கற்பதற்கு மாதாந்தம் 1500 ரூபாய் கல்வி நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment