ஹொரோனா பரிசோதனை நிலையமாக மாற்றப்பட்ட மட்டக்களப்பு கெம்பசை மீட்க எவ்வாறு அழுத்தம் வழங்குவது ? - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

ஹொரோனா பரிசோதனை நிலையமாக மாற்றப்பட்ட மட்டக்களப்பு கெம்பசை மீட்க எவ்வாறு அழுத்தம் வழங்குவது ?

கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வருகைதருகின்ற பிரயாணிகளுக்கு வைரஸின் தாக்கம் பற்றிய பரிசோதனை மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு கெம்பசை இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

இலங்கைக்கு வருகை தருகின்றவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலமாகவே வருகைதர முடியும்.

அவ்வாரானவர்களை குறித்த விமான நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் அல்லது ஓரிரு மணித்தியாலங்கள் பயணிக்கும் தூரத்தில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான பிரத்தியேக இடங்களில் அவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் நியாயமாகும்.

ஆனால் அரசுக்கு சொந்தமான எத்தனையோ இடங்களையும் தாண்டி, பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தேர்ந்தெடுத்ததுதான் இங்கே பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிமையாளரிடமிருந்து எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் இராணுவத்தைக் கொண்டு சர்வாதிகார முறையில் உள்நுளைந்ததானது இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நிலவுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து பிரயாணிகள் வருவதற்கு எந்தவித தடைகளும் விதிக்காமல், நோய் தாக்கம் அடைந்தவர்களையும் நாட்டுக்குள் வரவழைத்து முஸ்லிம் பிரதேசத்தில் சிகிச்சை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் கொரோனா தாக்கம் இலங்கையில் பரவுவதென்றால் சிங்கள பிரதேசங்களில் பரவிவிடகூடாது. அது முஸ்லிம் பிரதேசங்களில் பரவினால் பருவாயில்லை என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் காணப்படுவதாக எண்ணத்தோன்றுகின்றது.

அதாவது இனச்சுத்திகரிப்பின் மூலம் முஸ்லிம்களை அழிப்பதற்கு முயன்ற இனவாதிகள் இப்போது கொரோனா வைரஸைக் கொண்டு அழிக்க முற்படுகின்றார்களா என்று சிந்திக்க தோன்றுகிறது.

அத்துடன் கல்வி கற்பதற்காக எதிர்காலத்தில் எந்தவொரு மாணவர்களும் இங்கு வருகைதர விரும்ப மாட்டார்கள். இதனால் இந்நிறுவனம் வெற்றியடைவது சாத்தியமற்றது.

இந்த பல்கலைக்கழகத்தின் பிரமாண்டம் மற்றும் அதன் கட்டடக்கலை மீது பொறாமை கொண்ட இனவாதிகள் இதனை சரியா பல்கலைக்கழகம் என்று பிரச்சாரம் செய்து கடந்த நல்லாட்சியில் இதனை சுவீகரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது இராணுவ பலத்தை பாவித்துள்ளார்கள்.

அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் மட்டும் இதற்கு தீர்வினை கான முடியாது. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஆனால் அரசாங்கத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்வதுடன் மட்டும் நிறுத்திவிடாமல் இந்த பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தல் வேண்டும்.

அதற்காக மக்களை திரட்டி போராட்டம் நடாத்துவதன் மூலமாக மட்டுமே அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை உலகம் அறியச்செய்து அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க முடியும்.

இதனை வெறுமனவே ஒரு ஹிஸ்புல்லாஹ்வின் பிரச்சினையாக பார்க்காமல், இதனை முழு முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்ப்பதே எமது அனைவரதும் கடமையாகும். செய்வார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment