ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அதன் செயலாளர்களும் இன்று (10) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் உள்ளக நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, லங்கா மகாஜன சபா, லிபரல் கட்சி, ஶ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
இம்முறை தேர்தலில் 12,000 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
குறித்த வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக் கொள்வதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment