”கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு கட்டண வசூல் இல்லை” - இராணுவத்தளபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

”கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு கட்டண வசூல் இல்லை” - இராணுவத்தளபதி

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தி வைப்பதற்குக் கட்டணம் அறவிடப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானதென்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் நபர்களிடம் எந்தவொரு கட்டணமும் அறவிடப்படமாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு நாளாந்தம் வழங்கப்படும் உணவுக்கு 14 நாட்களுக்கான கட்டணமாக 7,500 ரூபாவை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தன.

இத்தகைய, கட்டணங்கள் அறவிடப்படுவதாகக் காட்டும் ஆவணங்கள் போலியானவை என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment