கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழுமையாக செயற்படுகிறது - அமைதி, சமாதான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியாக கோட்டபாயவை தெரிவு செய்தனர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழுமையாக செயற்படுகிறது - அமைதி, சமாதான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியாக கோட்டபாயவை தெரிவு செய்தனர்

இலங்கையில் வசிக்கும் 21.4 மில்லியன் மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சானது சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிருவனங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(13) அனுராதபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற குடும்பங்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஊடகங்களுக்கு மத்தியில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதேவேளை சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தும் நிலையங்களை எதிர்த்து அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து தாய் நாட்டுக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட போது அவர்களிடமிருந்து ஆட்சேபனைகளை சந்திக்க நேர்ந்தகவும் அவர் தெரிவித்தார். தாய் நாட்டுக்கு திரும்பிய அவர்கள் பீதியடைந்து காணப்படுவதுடன் தங்களது குடும்பங்களுடன் ஒன்று சேர்வதற்கு பொறுமையின்றி செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்களிடம் ஆட்சேபனைகள் இருந்த போதும், ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் பாதுகாக்கும்பொருட்டு அவர்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உட்படுத்துவது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளின் போது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ள அதேவேளை மக்கள் வீணாக அச்சம் கொண்டு தேவையில்லாமல் பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வைக்கத்தேவையில்லை என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏதேனும் அனரத்த சூழ்நிலைகள் ஏற்படும்போது முதலில் துணிச்சலுடன் முன்வந்து செயற்படும் இராணுவத்தினரே கொடிய உயிர்கொல்லி வைரஸான கோரோனா நாட்டில் பரவுவதை தடுப்பதற்கும் அர்ப்பனிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்கள் அவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் போன்ற விடயங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி அதன் அறிக்கையினை சமர்பிக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சிவா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
கஜபாகு படையணியின் வரலாறு தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர் இப்படையணி மறைந்த மேஜர் ஜெனரல் கே.எம். விமலரத்ன அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தான் அதற்கு தலைவராக இருப்பதை இட்டு பெருமைகொள்வதாகவும், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத்தளபதியிம் இப்படைப்பிரிவில் இருந்து உருவாகியதை இட்டு பெருமை கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னர் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்பி நாட்டின் அமைதியான மற்றும் சமாதான சூழலை உருவாக்கும் ஒரே நோக்கிலேயே இலங்கை மக்கள் ஜனாதிபதியாக ராஜபக்ஷவை தெரிவு செய்ததாக தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்பும் வகையில் என்னிடமும் மற்றும் முப்படை தளபதியிடமும் பாரிய பொறுப்பை சுமத்தியுள்ளதால் அதனை பலப்படுத்த அரசுக்கு தமது ஒத்துழைப்க்களை வழங்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

நாட்டை பாதுகாத்து கல்வியில் தலைசிறந்து விளங்குவதன் மூலம் தமது பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வது உங்கள் கடமை எனவும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய செயலாளர் சுட்டிக்காட்டினார்.

செயலாளர் குணரத்தன கஜபா படைப்பிரிவின் அமைப்பாளர் மறைந்த மேஜர் ஜெனரல் விமலரத்ன அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலியும் செலுத்தினார். செயலாளருடன் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி குணரத்னவும் கலந்து சிறப்பித்தார்.

No comments:

Post a Comment