மார்ச் 01 - 15 காலப் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதியவும், இன்றேல் சட்ட நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

மார்ச் 01 - 15 காலப் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதியவும், இன்றேல் சட்ட நடவடிக்கை

இம்மாதம் 01 - 15 காலப் பகுதியில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியாவிலிருந்து வந்தவர்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இவ்வறிவுறுத்தலை விடுத்துள்ளது.

குறித்த நபர்கள் 119 எனும் பொலிஸ் அவசர தொலைபேசிக்கு உடனடியாக அறிவிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களதும், ஏனையோரதும் நலன் கருதி இந்நடவடிக்கையை பின்பற்றுமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு செயற்படத் தவறுவோர் மீது, தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad