திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லை - வதந்திகளை பரப்ப வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லை - வதந்திகளை பரப்ப வேண்டாம்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த குறித்த ஆலய நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவர் க. அருள்சுப்பிரமணியம், இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, இன்று (28) திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் மற்றும் தொலைபேசி மூலமாக செய்தி பரவி வருகின்றது.

இன்று அதிகாலை முதல் தொலைபேசி மூலம் பலர் அழைத்து கோயில் கலசம் மற்றும் சிலைகள் உடைந்து விழுந்தாக கேட்டனர். அவ்வாறு எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை இவ்வாறான வதந்திகளை பரப்புவோர், இவ்வாறான செயல்களை செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இதுபோல திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விசாரித்ததன் அடிப்படையில் தெளிவாகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

(அன்புவழிபுரம் நிருபர் - வடமலை ராஜ்குமார்)

No comments:

Post a Comment