பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானமில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானமில்லை

(ஆர்.யசி) 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பூட்ட எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கும் சிவில் சேவைகள் பணிப்பகம், பலாலி விமான நிலையத்தை இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

தற்போது வரையில் 14 சர்வதேச நாடுகளுக்கான பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. 

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

அத்துடன் பலாலி விமான நிலையத்தையும் இரண்டு வாரத்திற்கு மூட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. குறிப்பாக பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் சேவைகள் பணிப்பகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment