தேர்தலை பிற்போடும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

தேர்தலை பிற்போடும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு

(ஆர்.யசி) 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சுறுத்தல் நிலவுகின்ற போதிலும் கூட பொதுத் தேர்தலை பிற்போடும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அடுத்த வாரம் வரையில் நிலைமைகளை ஆராய்ந்து தேர்தல் குறித்த தீர்மானம் ஒன்றிற்கு வரமுடியும் எனவும் சகல கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பக அதிகாரிகள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்ட விடயத்தை கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad