நகைச்சுவையாளர்களையும், காலத்தை வீணடிப்பவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

நகைச்சுவையாளர்களையும், காலத்தை வீணடிப்பவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டாம்

(இராஜதுரை ஹஷான்)

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் தூர நோக்கு கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே வலியுறுத்தினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்.

225 உறுப்பினர்களும் மோசடியாளர்கள், மக்களிள் வரிப்பணத்தை மோசடி செய்கின்றார்கள் என்ற தவறான நிலைப்பாட்டையும். கடந்த காலங்களில் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சிலரது செயற்பாடுகள் தோற்றுவித்தன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை சிறந்த முறையில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நகைச்சுவையாளர்களையும், காலத்தை வீணடிப்பவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இம்முறை தெரிவு செய்ய வேண்டாம். 

நாட்டை அனைத்து துறைகளிலும் கட்டியெழுப்ப சிறந்த பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். என்ற இலக்கினை கொண்டு பொதுத் தேர்தல் தொடர்பான தீர்மான்த்தை எடுப்பது இன்றியமையாததாகும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment