புத்தளத்தில் வீடொன்றிலிருந்து சீன நாட்டவரின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

புத்தளத்தில் வீடொன்றிலிருந்து சீன நாட்டவரின் சடலம் மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடா மெதவாச்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

65 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த இலங்கை பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர், உயிரிழந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment