கைது உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி ரவி கருணாநாயக்க ரிட் மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

கைது உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி ரவி கருணாநாயக்க ரிட் மனு தாக்கல்

முறிகள் மோசடி தொடர்பில் தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி, ரவி கருணாநாயக்க இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து, நிறைவுசெய்து கோட்டை நீதவானால் கடந்த 6ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தம்மை கைது செய்யுமாறு சட்ட மா அதிபரால் பதில்​ பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு பிறப்பிக்கப்ட்டுள்ள உத்தரவையும் இரத்து செய்யுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இரத்து செய்யுமாறும் ரவி கருணாநாயக்கவின் ரிட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி தொடர்பான இரு கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 06 ஆம் திகதி பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் முகமாக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 03 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment