உணவகமொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி - இருவர் படு காயம்! - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

உணவகமொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி - இருவர் படு காயம்!

நீர்கொழும்பு, பெரியமுல்லை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இனந்தெரியாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இரவு 10 மணியளவில், குறித்த உணவகத்திற்கு உணவு உட்கொள்ள வந்த சிலர் மதுபானம் அருந்த முற்பட்ட போது உணவகத்தின் உரிமையாளர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார். 

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் ஆயுதங்களை எடுத்துவந்து உணவகத்திற்கு சேதம் விளைவித்ததுடன் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

குறித்த தாக்குதலில், வெட்டுகாயங்களுக்குள்ளான உணவகத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததுடன் உணவகத்தின் உரிமையாளரும் மேலும் ஒரு ஊழியரும் பலத்த வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பெரியமுல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment