இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்டின் பேச்சாளர் ருபேட் கொல்விலே இதனை தெரிவித்துள்ளார்.
மிருசுவில் படுகொலைகளுக்காக மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் குழப்பமைடைந்துள்ளார் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் யுத்த குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், ஏனைய பாரிய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கை தவறிவிட்டது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மீறல்கள் மற்றும் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்விற்கான உரிமையுள்ளது இதில் நீதி மற்றும் நஸ்ட ஈட்டிற்கான சமத்துவம் வாய்ப்பும் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குற்றவாளிகள் இழைத்த குற்றங்களுக்காக சமாந்திரமான தண்டனைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment