(செ.தேன்மொழி)
பொதுக் கூட்டணி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், செயற்குழுவும் முழு ஆதரவையும் பெற்றுக் கொடுத்திருந்த போதும், பொதுக் கூட்டணியாக இல்லாமல் தனிக் கட்சியாக பதிவு செய்ததன் காரணமாகவே தற்போதைய முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு கட்சியில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்த வியடம் தொடர்பில் தாம் எந்தவொரு விவாதத்திலும் கலந்து கொண்டு வாதிட தயாராக உள்ளோம்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு தரப்பின் யாப்புகளிலும் திருந்தங்கள் மேற்கொள்ளயப்பட வேண்டிய விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment