(ஆர்.விதுஷா)
இலங்கை கணக்காய்வு பரீட்சகர் சேவை சங்கத்தினரால் பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் 500 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அரச கணக்காய்வு சேவையை உடனடியாக நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஆர்பாட்டகார்கள், கணக்காய்வு சேவை ஆணைக்குழுவே! அரச கணக்காய்வு சேவையினை ஸ்தாபிப்பதற்கு தடையாக இருப்பதனை நிறுத்து, கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் எதிர்ப்பினை உடனடியாக நிறுத்து, தனித்துவமாக உயரிய மற்றும் சிரேஷ்ட சட்டத்திலான தொழில்சார் சேவையில் ஒன்றாக அரச கணக்காய்வு சேவையினை நிறுவு என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைளை ஏற்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறுமே இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்பாட்டகார்கள் ஜனாதிபதி செயலகத்தை அடைந்த போது அவர்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவர்களுடைய கோரிக்கை உள்ளடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment