(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை கைது செய்யுமாறு நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், நீதிமன்ற பிடியாணை அனுப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 96 மணி நேரமும் கடந்துள்ளது.
இந்நிலையில் அவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய சி.ஐ.டி.யால் முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக நியமிக்கப்பட்ட சி.ஐ.டி.யின் குழுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக சி.ஐ.டி.யில் மட்டும் 15 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருக்குமிடம் அல்லது அவர்கள் குறித்த ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், 0112320141, 0112320142, 0112320143 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சி.ஐ.டி.யை தெளிவுபடுத்த முடியும் என சி.ஐ.டி. அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment