இலங்கையில் தற்போதைய அரசாங்கம் மீண்டும் அச்சசூழலை ஏற்படுத்துகின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு கண்காணித்தல், துன்புறுத்தல், மனித உரிமைகள் பணியாளர்கள் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் ராஜபக்ச அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் கருத்து சுதந்திரத்திற்கான சூழல் குறைவடைந்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த 15 மனித உரிமை பணியாளர்களிடம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.
இதன்போது தொடர்ச்சியான கண்காணிப்புகள் அதிகாரிகள் மட்ட அழுத்தங்கள் காணப்படுவது தெரியவந்துள்ளது.
புலனாய்வு அதிகாரிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு முன்னர் அவர்களின் திட்டங்கள் என விசாரணை செய்துள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் பிரச்சாரம் செய்வதும் ஜெனீவா செல்வதும் சாத்தியமாகாது என கருதுகின்றோம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இலங்கையில் அச்சசூழல் மீண்டும் ஏற்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் மற்றும் மரண அச்சுறுத்தல்களில் அரச பாதுகாப்பு இயந்திரத்திற்கு தொடர்பிருப்பது புலனாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்னுக்கு தெரியாமல் இடம்பெறும் விடயங்களே ஆபத்தானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment