மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரோனா தனிப்படுத்தப்பட்டுள்ளவர் முகாமில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டு தனிப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 55 வயதுடைய நபரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாணந்துறையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று தனிப்படுத்தல் முகாமில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment