தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு

தேவையான நெல்லை அரசாங்கம் களஞ்சியப்படுத்தியிருப்பதனால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையில் அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மரதகஹமுல அரிசி விற்பனையாளர்கள் தகவல் தருகையில் எந்தவித அரிசிக்கும் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்தனர். பாரிய அளவில் அரிசியை விற்பனை செய்பவரான டபிள்யு. சிறிசேன கருத்து தெரிவிக்கையில் தம்மிடம் போதிய அளவு நெல் கையிருப்பில் இருப்பதாகவும் அவற்றை விரையில் அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோரின் சங்கம் கருத்து தெரிவிக்கையில் 8 மாத காலத்துக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அசிரி விலை அதிகரிக்கும் நிலை இல்லை என்று நெல் சந்தைப்படுத்தும் சபையில் தலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்தார். எந்தவித பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என்று கீல்ஸ் மற்றும் காகீல்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment