மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு

இன்று (14) முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியிலுள்ள சினிமா திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மத அலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார ஆலோசனைக்கு அமைவாக இந்த உத்தரவை மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

இதற்கு அமைவாக மறு அறிவித்தல் வரையில் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குளில் திரைப்படங்களை வெளியிடுவது இடை நிறுத்தப்படவுள்ளது.

நாட்டில் 187 திரையரங்குகள் உண்டு, இவற்றில் 170 மாத்திரமே செயற்படுகின்றன. விசேடமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு போன்ற திரையங்குகளில் தமிழ் சினிமாப் படங்கள் திரையிடப்படும் இடங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர். 

இதேபோன்று ஆங்கில திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளிலும் இரசிகர்கள் கூடுகின்றனர். மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment