வீட்டிலிருந்தவாறு நாட்டிற்கு தலைமை தாங்கப்போவதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.
எனக்கு சிறிய அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன, காய்ச்சலும் இருமலும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதம மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் நான் மருத்துவ பரிசோதனை செய்தேன் அதன்போது வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் என்னை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தியுள்ளேன், நான் வீட்டிலிருந்து பணியாற்றுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே முற்றிலும் பொருத்தமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் தொழில்நுட்பத்தின் சிறப்பு காரணமாக என்னால் எனது முக்கிய குழுவினருடன் தொடர்புகொள்ள முடியும் வைரசிற்கு எதிரான போராட்டத்தை வீட்டிலிருந்தே முன்னெடுக்க முடியும் எனவும் பொறிஸ்ஜோன்சன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment