பிரிட்டிஸ் பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

பிரிட்டிஸ் பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ்

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மட் ஹன்கொக் கொரேனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் தன்னை தனிமைப்படுத்துவதாக அறிவித்துள்ளார். 

பிரிட்டிஸ் பிரதமர் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ள செய்தி வெளியான ஒரு சில மணித்தியாலங்களி;ல் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கு பொறுப்பாகவுள்ள சுகாதார அமைச்சர் ஹன்கொக் அடுத்த வாரம் வரை தன்னை தனிமைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 

பொறிஸ் ஜோன்சனும், சுகாதார அமைச்சரும் அமைச்சர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். எனினும் ஏனைய அமைச்சர்கள் தலைமை விஞ்ஞானி அதிகாரிகள் ஆகியோரை நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பிரதமரும் சுகாதார அமைச்சரும் எப்படி நோய் தொற்றிற்கு ஆளானார்கள் என்பது தெரியாத அதேவேளை பிரதமர் அலுவலகத்தில் பணி புரியும் பலர் நோய் தொற்றினால் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment