சுய தனிமைப்படுத்தலில் இருந்த பதினைந்து பேர் சான்றிதழ் வழங்கங்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

சுய தனிமைப்படுத்தலில் இருந்த பதினைந்து பேர் சான்றிதழ் வழங்கங்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்டனர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார அலுவல்கள் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் கடந்த 14 நாட்களாக சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை கொரோனா நோய்த் தொற்று இல்லாத நிலையில் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி நேற்று (31.03.2020) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கடந்த இரு வாரங்களுக்கு முதல் குவைத், கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தோரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களது இல்லங்களுக்கு சென்று இவர்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து விட்டது என்று மருத்துவ சான்றிதழ் வழங்கியதுடன் காய்ச்சல் தடுமல் ஏதும் ஏற்பட்டால் தொலைபேசி மூலமாக எங்களை தொடர்பு கொள்ளுமாரும் அல்லது வைத்தியசாலைக்கு செல்லுமாரும் அறிவுறுத்தப்பட்டனர்.

சுய தனிமைப்படுத்தல் மூலம் பதிநான்கு நாட்கள் வீட்டில் இருந்த பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த பதினைந்து பேருக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment