எல்லைகளை மூடுகின்றது ஐரோப்பிய ஒன்றியம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

எல்லைகளை மூடுகின்றது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 

தற்காலிக கட்டுப்பாடு 30 நாட்களுக்கு நீடிக்கும் என குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் 30 நாட்களுக்கு பின்னர் மேலும் நீடிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஐரோப்பிய பிரஜைகளின் குடும்பத்தவர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

பயணங்களை எவ்வளவிற்கு குறைக்கின்றோமா அவ்வளவுக்கு வைரசினை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய பேரவை இன்று எல்லைகளை மூடுவதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜேர்மனி தனது எல்லைகளை மூடியுள்ளது. ஜேர்மனி இன்று பிரான்ஸ் அவுஸ்திரியா சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான தனது எல்லையை மூடியுள்ளது. வர்த்தக ரீதியிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என ஜேர்மனி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad