1800 கோடி ரூபா செலவில் ஒரு அரசாங்கம் மூலமே செயற்படுத்த சாத்தியமற்ற ஒரு திட்டம் தனி மனிதனாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உயர் படிப்பை தொடர திறமை இருந்தும் வசதியற்ற சாதாரன நடுத்தர வர்க்கத்தை சார்ந்தோருக்கு மிகப் பெருமதியாக அமையும் என்று உத்தேசித்து நிர்மானிக்கப்பட்ட ஒரு பல்கலைகழகம்தான் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்.
இன்று வைரஸை காரனம் காட்டி அரசு அபகரித்துக் கொண்டுள்ளது ஆனால் அதைப்பற்றி எல்லாம் சற்றும் சிந்திக்காமல் அரசியல் வெறுப்பை தங்களில் சுமந்து கொண்டு அரசு அபகரித்ததை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் சாயம் உடம்பில் ஊரிப் போன ஒரு மடமையான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை நினைத்து மனது கனக்கின்றது.
இங்கு மக்கள் போராடுவது அந்த பல்கலைகழகத்திற்காக அல்ல அதன் மூலம் வரவுள்ள பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பதற்காக ஆனால் வெறுமனே சமுகத்தையோ இந்த கொடிய நோய் பற்றியோ எந்தவொரு கவலையும் அச்சமும் இல்லாத ஒரு கூட்டத்தினர் வெறும் அரசியல் இலாபத்திற்காக மாத்திரம் தங்களை ஒரு சமுகவாதியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஒதுக்குப்புறமான மாந்தீவை கொரோனா கவனிப்பு நிலையமாக பயன்படுத்தவே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், மக்கள் நடமாட்டமுள்ள பகுதியைத் தெரிவு செய்தமையை கண்டும் காணாதிருப்பது, கொரோனாவை வைத்து திருப்தியடைகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
இன்று வைரசினை காரனம் காட்டி பல்கலைகழகத்தை அபகரித்துள்ள இரானுவம் எதிர்காலத்தில் வைரஸ் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்ட பின்னரும் பல்கலைகழகத்தை விடுவிப்பார்கள் என்று நாம் கூற முடியாது. அங்கேயே அவர்கள் முகாமமைத்து தங்களது கட்டுப்பாட்டினுள்ளே வைத்திருக்கலாம் இதனால் பாதிக்கப்படப்போவது நானோ நீங்களோ அல்ல நம் சமுதாயமும் இளம் சந்ததியினருமே.
றிபான் இஸ்மாயில்
No comments:
Post a Comment