இன மத பேதம் இல்லாமல் சேவை செய்யக்கூடியவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க - எம்.வை.எம்.நிப்ராஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

இன மத பேதம் இல்லாமல் சேவை செய்யக்கூடியவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க - எம்.வை.எம்.நிப்ராஸ்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

எமது நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஓர் சிறந்த தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார். இவரின் செயற்பாடுகள் யாவும் முன்மாதிரியாக காணப்படுகின்றது. இது நானும் நீங்களும் கண்ணுடாக காணும் விடயமாகும் என முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் கல்முனைக்கான இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனைக்கான இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்களினால் மக்கள் சந்திப்பு திங்கட்கிழமை (09) இரவு அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இவ் மக்கள் சந்திப்பில் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ராஜபக்ஷ மற்றும் சுபுன் திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க அம்பாரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இன, மத பேதம் இல்லாமல் சேவை செய்யக்கூடியவராவார். இவர் கடந்த கிழக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சராக இருந்த போது சகல இன மக்களுக்கும் சமமாக சேவை செய்தவர்.
என்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்பவர் இவரை நாம் பலப்படுத்த வேண்டும் எதிர்வரும் காலம் பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது நாம் இவரின் மூலம் ஓர் சிறந்த மக்கள் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் 

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை நாங்கள் சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

இதன்போது பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தோலாசிக்கப்பட்டதுடன் இதனை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் பற்றி ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்பு செயற்பாடுகள் பற்றி இதில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment