தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை தவிர நாங்கள் எந்த விதத்திலும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தர முடியாது. அதேபோல் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதன் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை. 

அதன் காரணமாகத்தான் நாங்கள் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்பெடுத்து மூன்று மாதங்கள் காலம் ஆகியும் நாம் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை. அவர்களுடன் பேசி எந்தவித பிரயோசனமும் இல்லை. 

எனவே நாங்கள் இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் இணைந்து செயற்படுவதன் மூலமே நமக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லை. 

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை எனினும் நாங்கள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம் அதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார். 

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யாழ்.மாவட்ட உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு கட்சியின் யாழ். மாவட்ட தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வேட்பாளர்கள் வேட்புமனு பத்திரத்தில் கையப்பமிட்டுள்ளனர்.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை றஜீவ் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் ஆகிய இருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad