கொரோனாவை கட்டுப்படுத்த 5 பரிந்துரைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த 5 பரிந்துரைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஐந்து பரிந்துரைகளை பரிந்துரைத்துள்ளது. 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இன்று அனுப்பி வைத்திருக்கும் கடிதத்திலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கியிருப்பதுடன், அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் கோரியிருக்கிறது. 

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு.

1. நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களின் செயற்பாடுகளையும் இடைநிறுத்துதல். 

2. ஏற்கனவே வழங்கப்பட்ட பொது விடுமுறையை இவ்வாரம் முழுவதும் நீட்டித்தல் மற்றும் அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுத்தல். 

3. அனைத்து பிரதேசங்களுக்குமான கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலுவான கட்டமைப்பு முறையொன்றை உருவாக்கல். 

4. அரச மற்றும் தனியார்துறை சுகாதார சேவை ஊழியர்களுக்கு முறையான தொற்றுத்தடுப்பு பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல். 

5. அரச வைத்தியசாலைகளிலுள்ள அனைத்து அவசரமற்ற சுகாதார சேவை வழங்கல்களையும் பிற்போடுதல். 

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கும் சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னரே நாம் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம். 

எனினும் இந்நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தி, கடைப்பிடிப்பதற்குத் தவறியதால் இத்தாலியால் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டிருப்பதுடன, அந்நாட்டு மக்களும் மிகுந்த ஆபத்தை நோக்கியுள்ளதாகவும் அவர்கள் இந்த கடிதத்தில் சுட்க்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment