எஸ்.எம்.எம்.முர்ஷித்
தென் கொரியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை கொண்டு வரப்பட்டனர்.
இதேவேளை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் புணாணை பகுதியிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை கொரோனா மத்திய நிலையங்களாக மாற்றி அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையிலேயே தென் கொரியாவில் இருந்து வந்த இலங்கையர்கள் இரண்டு பேருந்துகளில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களில் முதற்கட்டமாக ஒரு குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவுள்ளதால் பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை கொரோனா மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment