(நா.தனுஜா)
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அவசியமான அனைத்துத் தயார்ப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
அவசியமான இறக்குமதிகள், ஏற்றுமதிகள் என்பவற்றுக்கான சுங்க அனுமதி வழங்கல் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் என்பன மு.ப 10 மணி தொடக்கம் பி.ப 2 மணி வரை சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று சுங்கப் பிரிவின் கொள்கலன் முனைய நடவடிக்கைகள் மு.ப 10 மணி தொடக்கம் பி.ப 5 மணி வரை மேற்கொள்ளப்படும்.
இது குறித்த சந்தேகங்கள் காணப்படுமாயின் தம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி தெரிந்து கொள்ள முடியும் என்றும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment