பிரான்ஸ் நாட்டின் கலாசார அமைச்சர் ஃபிராங்க் ரைஸ்டர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
46 வயதான ஃபிராங்க் ரைஸ்டருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாத்திரம் பிரான்ஸில் 286 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் பிரான்ஸில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானத 1,412 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமல்லாது 30 பேர் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment