தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை - சிவாஜிலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை - சிவாஜிலிங்கம்

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது. 

வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளைமறுதினம் 12 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும். அத்தோடு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுத் தேர்தல் பரப்புரை வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்படும். 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் பிளவு என்று ஊடகங்களில் வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளுடன் பேசி தகுந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என்றார் .

No comments:

Post a Comment