கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஏழு மாத சம்பளத்தை வழங்கினார் துருக்கி ஜனாதிபதி! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஏழு மாத சம்பளத்தை வழங்கினார் துருக்கி ஜனாதிபதி!

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்காக துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், தனது ஏழு மாத சம்பளத்தை வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் துருக்கி அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களும் இந்த நடவடிக்கைக்காக 5.2 மில்லியன் துருக்கி லிராவை (791,000 டொலர்) உதவியாக வழங்கியுள்ளனர். 

கொரோனா பரவலினால் பொருளாதார ரீதியில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு உதவுவதை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி எர்டோகன் கூறினார். 

துருக்கியில் தற்போது 10,827 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

No comments:

Post a Comment