வெளிநாட்டு தம்பதியினரை அச்சுறுத்திய விவகாரம் : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அமைச்சர் பிரசன்ன உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

வெளிநாட்டு தம்பதியினரை அச்சுறுத்திய விவகாரம் : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அமைச்சர் பிரசன்ன உத்தரவு

இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது கடந்த 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியை பார்க்க சென்ற வெளிநாட்டு தம்பதியினர் இலங்கை அணிக் கொடியுடன் இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அவர்களிடம் சென்ற ரசிகர் ஒருவர் குறித்த வெளிநாட்டுப் பெண், மேனியில் போர்த்தியிருந்த தேசியக் கொடியை அகற்றுமாறு அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை காணொளி மூலம் பதிவு செய்த நபர் ஒருவர் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது வைரலாகி வருவதுடன், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டணத்தை தெரிவித்ததுடன், வெளிநாட்டு தம்பதியினரிடமும் மன்னிப்பு கோரியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். அதற்கமைவாக தற்போது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment