மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

எம்.எஸ்.எம்.முர்ஸீத்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் இன்று (05.03.2020) வியாழக்கிழமை நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேல்தல் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த அசனார் முகம்மட் அஸ்மி, மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த றமழான் முகம்மது இம்றான் ஆகிய இருவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவும், மாவட்டத்தில் தோன்றி வரும் அசிங்க அரசியலை கட்டுப்படுத்துவதற்காகவும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்காகவும் இளைஞர்களை கொண்ட ஒரு குழு களத்தில் இறங்குவதாகவும், பிராந்திய அரசியல் மாற்றங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தியாக எமது சுயேட்சைக்குழு செயற்படும் என அதன் தலைமை வேட்பாளர் அஸ்மி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாயின் தலா ஒருவருக்கு 2000 ரூபா வீதம் ஒரு சுயேட்சைக்குழு 16000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad