காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் கிராமததில் லொறி தீக்கிரை - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் கிராமததில் லொறி தீக்கிரை

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் பிரதேசத்தில் 02.03.2020 அதிகாலை சிறிய லொறியொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் குறித்த லொறியின் முன்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் வசித்து வரும் முகம்மட் நாசர் என்பவருக்கு சொந்தமான சிறிய லொறியே இவ்வாறு தீப்பற்றி சேதமடைந்துள்ளது.

அதிகாலை வேளை சிறிய லொறி எரிந்து கொண்டிருந்த போது அவதானித்த அயலவர்கள் லொறி சொந்தக்காரரை எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து லொறி சொந்தக்காரரும் அயலவர்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர்.

இது தொடர்பாக லொறி சொந்தக்காரர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது நாசகர செயலாக இருக்கலாமா என்பது குறித்தும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad