காத்தான்குடி வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

காத்தான்குடி வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதியில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (10) செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை வீதியில் பாதணிகள் விற்பணை செய்யும் வர்த்தக நிலையத்தில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

முகம்மது இஸ்மாயில் ஹபீப் (32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் தலைமையில் சென்ற பொலிஸார், குறித்த வர்த்தக நிலையத்தின் மாடியிலிருந்து இவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

புதிய காத்தான்குடி அப்றார் நகரில் வசிக்கும் மேற்படி நபர் ஒரு குடும்பஸ்தர் எனவும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எஸ்.எம். நூர்தீன்

No comments:

Post a Comment