தாய் நாட்டிற்காக படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளரான முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (10) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது..
11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பாக, நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து, வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அஜித் பிரசன்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும், மேலதிக நீதவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்.
அத்துடன், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர்கள் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடுமாறு சட்ட மா அதிபர் மற்றும் சிஐடிக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment