கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற சுகாதார துறையினரினால் தங்களின் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் ஆலோசனையை கட்டாயம் கடைப்பிடித்து செயற்படுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருந்து தெரிவிக்கையில், நமது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நிற்காமல் ஒவ்வொரு நபரின் நலன் தொடர்பான செயற்பாடுகள் என்பதினால் இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாளாந்தம் கூலி தொழில் செய்து குடும்ப வாழ்க்கை நடாத்தும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வறுமையை போக்க அரசாங்கம் டின் மீன், பருப்பு ஆகியவற்றின் விலையினை மாத்திரம் குறைத்தல் நாளாந்த தொழிலாளியின் வறுமை போக்க முடியாத செயற்பாடாகும் இதற்கு அரசாஙகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டு மக்களின் நலனை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவசரகாலச் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பாராளுமன்றத்தைக் கூட்டி மக்களின் நலன்களை முன்னெடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய பொறிமுறையினை ஏற்படுத்தி வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வைரஸ் தாக்கத்திலிருந்து நமது நாட்டையும், நமது பிரதேச மக்களையும் முழுமையாக பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment