கொரோனா வைரஸிலிருந்து நமது மக்களை பாதுகாக்கும் வண்ணம் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தினை மதித்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் வேண்டுகோள் விடுத்தார்.
கொடிய தொற்று நோயான கொரோனா நமது நாட்டில் அதிகரித்து வருகின்ற இத்தருணத்தில் எம்மையும், எமது மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வீட்டிலிருந்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன், இத் தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை உரிய முறையில் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசியல் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு கொரோனா தொற்று நோய் தாக்கம் சம்மந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள சகல தரப்பினரும் முன்வந்து செயற்பட வேண்டும்.
இத் தருணத்தில், அரசாங்கமானது நோய் தொற்று உள்ளானவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இவ்வேளையில் இந்நாட்டில் வறுமையில் வாழும் மக்களுக்கு உடனடியாக தேவையான உலர் உணர்வுப் பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு, சகல மக்களும் இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெற இறைவனிடம் பிராத்தனைகளில் ஈடுபட வேண்டும், எனவும் மேலும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
No comments:
Post a Comment