ஊரடங்கு சட்டத்தினை மதித்து நம் நாட்டு மக்களை பாதுகாக்க அனைவரும் தங்களுடைய வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

ஊரடங்கு சட்டத்தினை மதித்து நம் நாட்டு மக்களை பாதுகாக்க அனைவரும் தங்களுடைய வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சட்டத்தரணி ஹபீப் றிபான்

எமது நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் விதித்துள்ள ஊரடங்கு சட்டத்தினை மதித்து நம் நாட்டு மக்களை பாதுகாக்க அனைவரும் தங்களுடைய வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு சட்டத்தரணி ஹபீப் றிபான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும், தெரிவித்துள்ளதாவது,

பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களை தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கவை. இவ்விடயத்தில் சுகாதார துறையினருக்கும், பாதுகாப்பு துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளை, நாட்டு மக்களும் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன். 

தனிமைப்படுத்தல் காலத்தை விடுமுறையாக கருதி களியாட்டங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கை காலப்பகுதியாக கருதி வீடுகளில் கவனமாக இருங்கள்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நமது நாட்டையும், நமது பிரதேச மக்களையும் முழுமையாக பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற போது அனாவசியமாக பொது இடங்களில் கூட்டமாக கூடி நிற்காமல் தங்களுடைய நலன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணி ஹபீப் றிபான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment