கொரோனா வைரஸ் எதிரொலியாக அரண்மனையில் இருந்து வெளியேறுகிறார் ராணி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

கொரோனா வைரஸ் எதிரொலியாக அரண்மனையில் இருந்து வெளியேறுகிறார் ராணி

கொரோனா வைரஸ் எதிரொலியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ராணி 2ம் எலிசபெத் வெளியேறுகிறார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து அந்நாட்டில் 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமுடன் வைரஸ் பரவி வருகிறது. ஆண், பெண் பேதமின்றி உலகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. அத்துடன், 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ள பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (93) மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் (98) ஆகியோர் வசித்து வருகின்றனர். அரண்மனையில் பணியாளர்கள் அதிகளவில் இருப்பதுடன், பார்வையாளர்களும் நிறைய பேர் வந்து செல்வதுண்டு.

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் பலி எண்ணிக்கை 11 இல் இருந்து 21 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையும் 1,140 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 70 வயதுக்கு மேற்பட்டோரை தனியாக வைத்து அவர்களை பராமரிப்பது என அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.

இதனால் ராணி 2ம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் ஆகியோர் நார்ஃபோல்க் நகரில் உள்ள சாண்ட்ரிங்காம் எஸ்டேட்டில் தனியாக தங்க வைக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.

இதேபோன்று, முறையான அறிவுறுத்தலின் அடிப்படையில் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பற்றி கவனத்தில் கொள்ளப்படும் என்று அரண்மனை அறிக்கை ஒன்று தகவல் தெரிவித்து உள்ளது.

அவர் உடல் நலமுடன் இருக்கிறார். அரண்மனைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என தொடர்ச்சியாக நிறைய பேர் வந்து செல்கின்றனர். சமீபகாலம் வரை அவர்களை ராணி சந்தித்து வந்துள்ளார். 

அவரது 94 ஆவது பிறந்த நாள் வருவதற்கு சில வாரங்களே உள்ளன. அதனால் அவரை தனிமைப்படுத்தி வைப்பது சிறந்தது என ஆலோசகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment