ஊரடங்குச் சட்ட வேளையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

ஊரடங்குச் சட்ட வேளையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

நா.தனுஜா 

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார். 

இம்முறைப்பாடுகளில் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும், பாதிக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டிற்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். 

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதுடன், அவற்றில் 10 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டவை ஆகும். 

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் ஆகும். 

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை/பிள்ளைகளை பொறுப்புடன் பாதுகாப்பாகவும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. 

தற்போது சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில் அவர்களது மனநிலை குறித்த புரிதலை பெரியோர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment