ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் - 25 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் - 25 பேர் பலி

ஆப்கானிஸ்த்தான் தலைநகரில் சீக்கியர்களின் குருத்வாரா மீது இனந்தெரியாத ஆயுததாரிகளும் தற்கொலை குண்டுதாரிகளும் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

சீக்கிய வழிபாட்டுதலத்தின் வளாகத்திற்குள் காணப்பட்ட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர், எட்டு பேர் காயமடைந்துள்ளதுடன் 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என ஆப்கானிஸ்த்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பல மணி நேரம் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலம் மீது இடம்பெற்ற தாக்குதலை பின்னர் ஆப்கானிஸ்த்தான் படையினர் முறியடித்துள்ளனர். 

ஆயுததாரிகள் அந்த பகுதியை சுற்றிவளைத்து தாக்குதலை மேற்கொண்ட பின்னர் படையினர் அவர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மோதல் பல மணி நேரம் இடம்பெற்றுள்ளது. 
குழந்தையொன்றின் சடலம் உட்பட் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காபுலின் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

குருத்துவாரில் தாக்குதல் இடம்பெற்றவேளை காணப்பட்ட மொகான் சிங் என்பவர் சத்தம் கேட்டதும் மேசையின் கீழ் ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன அவை கைக்குண்டுகளாக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததன் காரணமாக தான் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அழுதபடி காணப்படும் குழந்தைகளை ஆப்கானிஸ்த்தான் படையினர் மீட்டுச் செல்லுங்கள் படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பகுதியில் வழிபாட்டிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment