கொரோனா தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் தீர்க்கமான முடிவு அவசியம், முஸ்லிம்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் நிலையும் ஏற்படலாம் - முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் தீர்க்கமான முடிவு அவசியம், முஸ்லிம்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் நிலையும் ஏற்படலாம் - முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்

இறப்புக்கு பின்னர் மறுமை இருக்கிறது என்பதை ஈமானாகக் கொண்டு வாழுகின்ற சமூகம் முஸ்லிம் சமூகமாகும். ஒருவரின் ஜனாஸா என்பது நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது ஈமானிய கோட்பாடாகும். இந்த நிலையில் கொரானா நோய்த் தொற்றுக்குள்ளான முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா எரிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் ஆழந்த துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் மட்டுமின்றி ஜரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் தொழுகையின் பின்னர் ஆழமான குழிகளில் நல்லடக்கம் செய்யப்படும் நிலை இருக்கின்ற போது இங்கு மட்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது இது குறித்து ஒட்டுமொத்த முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் சக்திகளும் கையாலாகாத நிலையில் இருந்துள்ளனவா என்ற கவலையை அளிக்கிறது. நாம் அறிந்த வரையில் இவ்விடயத்தில் ஜனாதிபதி முஸ்லிம்களின் முறைமையின் படி ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டபோதும் கீழ்மட்ட அதிகாரிகளினால் அவ் உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது முஸ்லிம் சமூகத்தை அவமதித்த ஒரு செயலாகவே இதனைக் கருத வேண்டி உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.

இவ்விடயம் குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது குறிப்பாக இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய கிழக்கு நாடுகளில் கொரானா தொற்று காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸா, தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. நம்நாட்டில் நடந்து முடிந்த இந்த விடயம் முஸ்லிம் மக்களின் மனங்களில் பெரும் வருத்தத்தையும் கண்ணீர் சிந்தும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. 

எனினும் மார்க்க கோட்பாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து செயற்பட அனுமதிக்க முடியாது இவ்வாறானவைகளை உடன் களைந்தெறிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றார். அவரது முயற்சிக்கு நானும் பங்களிப்புச் செய்து வருகின்றேன். அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளுடனும் இது விடயத்தில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதேவேளை, இவ்வாறான நிலை தொடருமானால் கொரானா தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் நிலையும் ஏற்படலாம் காரணம் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் அது மார்க்க கோட்பாட்டுக்குத் தீங்காகும் என்பதாகவும் அமையலாம் அல்லவா?

இந்த மண்ணில் பிறக்கின்ற அணைவரும் மரணித்துதான் ஆக வேண்டும் இந்த மரணத்துக்கு பின்னர் மறுமை உள்ளது என்பதை தமது முழுமையான ஈமானாக கொண்டு தனது உடலை மண்ணுக்குள் நல்லடக்கம் செய்யும் நல்ல மர்க்க விடயத்தை நாம் இழந்துவிட முடியாது என்பதை உறுதிபட ஏற்றுக்கொண்டு நடந்த முடிந்த தப்பு முதலும் கடைசியாகவும் இருக்கட்டும் என கருத்தில் கொண்டு நாட்டின் மேன்மைக்கும் பாதுகாப்புக்கும் நாம் அணைவரும் இணைந்து செயற்பட முன் வருவோமாக என்றுள்ளது.

No comments:

Post a Comment