மூன்று விமானங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல் - அவசரமாக தரையிறக்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

மூன்று விமானங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல் - அவசரமாக தரையிறக்கம்

வெடி குண்டு அச்சுறுத்தல்கள் தொடர்பில் ரஷ்யாவில் மூன்று பயணிகள் விமானங்கள் அரவசரமாக தரையிறங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவின் சுக்தோவ்கர் விமான நிலையத்தில் சுகோய் சூப்பர்ஜெட்-100 தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டின் அவசர கால சேவை நிலையத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு மற்றைய இரண்டு விமானங்களும் வெடி குண்டு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு விமானம் ஓம்ஸ்கில் தரையிங்கியுள்ளதையடுத்து, மற்றைய விமானம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கிலிருந்து சிம்ஃபெரோபோலுக்கு செல்லும் வழியில் ரோஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

அத்தோடு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளையும் பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதோடு, நகரங்கள், பாடசாலை, வணிக வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், நீதிமன்றங்களில் இவ்வாறன அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad